என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » செல்போன் கடை
நீங்கள் தேடியது "செல்போன் கடை"
லக்காபுரத்தில் செல்போன் கடையில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் பஸ் நிறுத்தத்தில் செல்போன் கடை வைத்திருப்பவர் சங்கர்(வயது 32). அரச்சலூர் அடுத்த பூ மாண்டன் வலசு 60 வேலாம்பாளையத்தை சேர்ந்தவர்.
இவர் நேற்று இரவு வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்து உள்ளனர்.
பிறகு கடையில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த துணிகர சம்பவம் லக்காபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரனை நடத்தி, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
திசையன்விளை மெயில் பஜாரில் உள்ள செல்போன் கடையில் 90 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை மெயின் பஜாரில் உள்ள செல்போன் கடையில் தூத்தக்குடி மாவட்டம் தெற்கு பேய்க்குளம் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்த சின்னத்துரை மகன் அருண்பாண்டி (வயது 27) ஊழியராக வேலை செய்து வந்தார்.
அந்த கடையில் உள்ள செல்போன்களை ஸ்டாக் செக் செய்யும் போது குறிப்பிட்ட மாடல் செல்போன்கள் மாயமானது தெரியவந்தது. அதன் மதிப்பு ஒரு லட்சத்து 90 ஆயிரம் என கூறப்படுகிறது. மாயமான செல்போன்களை கடை ஊழியார் அருண்பாண்டி திருடி சென்றுவிட்டதாக கடை மேலாளர் செல்வராஜா திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியை கைது செய்தார். அவரிடம் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான செல்போன்களை போலீசார் மீட்டனர். அருண்பாண்டியை சிறையில் அடைத்தனர். #tamilnews

×

X